அமைச்சர் பொன்முடி வீட்டில் ED ரெய்டில் சிக்கியது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது கைப்பற்றப்பட்டது என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவருக்கு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல மணி நேரமாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை - சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டின் முதல் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தைத் திறந்து, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் கடந்த 8 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் 70 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் உட்பட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com