சென்னையில் வருமானவரி துறையை தொடர்ந்து அமலாக்கத்துறையினரின் அதிரடி சோதனை!

சென்னையில் ஒருபுறம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் மறுபுறம் அமலாக்கத்துறையினரின் சோதனையும் தொடங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை
அமலாக்கத்துறைமுகநூல்

சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் அமலாக்கத்துறையினரின் சோதனையும் தொடர்வது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரி துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருந்தே திமுக மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை தொடரப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் அமைந்துள்ள எஸ்.கே பீட்டர் என்பவருக்கு சொந்தமான ஓசன் லைப் ஸ்பேஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ed
edtwitter

1000 கோடி வருமானம் ஈட்டும் இவரது நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் இந்தசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இதனைதொடர்ந்து சென்னை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள பிஎஸ் சுப்ரமணியன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த இருந்தனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அங்கு சோதனை நடத்தப்படாமல் உள்ளது.

அமலாக்கத்துறை
பிரதமர் மோடி சென்னை வருகை: ஐந்து அடுக்கு பாதுகாப்பு – போக்குவரத்தில் மாற்றம்

முன்னதாக இன்று காலை முதலே யானைகவுணி பகுதியில் உள்ள KAWARLAL & CO நிறுவனத்தின் உரிமையாளர் ராம் லால் என்பவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் நான்கு வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் நான்கு காவலர்கள் உள்ளிட்ட குழு சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தற்போது அமலாகத்துறையினரும் சென்னையில் சோதனை பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே வருமானவரித்துறையினரால் இவரது வீடு, அலுவகங்கள் என்று அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது கூடுதலான தகவல்.

குறிப்பாக பீட்டரின் நிறுவனத்தின் அலுவலகத்தினை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மு.க ஸ்டாலின் திறந்து வைத்ததும், இந்நிறுவனத்தின் உரிமையாளருக்கும் மற்றொரு பங்குதாரருக்கும் உள்ள பிரச்னை தொடர்பாக சென்னை மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com