டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுக்கும் நிலையில் இந்த அவசரக் கூட்டம் 29 ஆம் தேதி (நாளை) டெல்லியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம்புதிய தலைமுறை

டெல்லியில் நாளை நடைபெற உள்ள அவரசர கூட்டத்தில் தமிழகத்தின் நிலை குறித்து எடுத்துக் கூறுவதோடு, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற
உத்தரவிடுமாறு தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி
காவிரி

முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால் கர்நாடக அணைகளில் நீர் இல்லை என்பதால் தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது என அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இது குறித்து பேசுவதற்காக டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டமானது நடைபெற இருக்கிறது. அதில் இரு தரப்பு அரசுகளும் கலந்து கொண்டு இது குறித்து பேச இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com