தமிழ்நாடு
சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் மீட்பு
சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் மீட்பு
சேலம் அருகே கடத்தப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கடத்தல் தொடர்பான ரகசிய தகவல் கிடைத்ததால், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சேலம் அருகே தாரமங்கலம் சாலையில் பால்பண்னை என்ற இடத்தில் ஒரு காரை வழிமறித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். காரில் இருந்த 7 கிலோ எடையுள்ள பச்சை மரகதலிங்கத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். காரில் இருந்த ஒரு பெண் உட்பட 5 பேரையும் தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். மீட்கப்பட்ட பச்சை மரகதலிங்கத்தின் மதிப்பு ரூ.25 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.