‘ஆட்சியில் பங்கு வேண்டும்..’ டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தமிழ்நாட்டிலிருந்து பறந்த மின்னஞ்சல்கள்!
ஆட்சியில் பங்கு தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடமிருந்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கூட்டுமின்னஞ்சல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த மின்னஞ்சலில்,“ஆட்சியதிகாரத்தில் பங்கு முக்கியம், கூடுதல் சட்டமன்ற தொகுதிகள்அவசியம்; வாரியங்கள் - சங்கங்களில் இடங்கள் வேண்டும்; உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு வேண்டும் எனும் 4 விஷயங்களை விட்டுத்தராமல் கேட்டுப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பரவும் அந்த மின்னஞ்சல் பகிரங்கமாக வெளியாகியிருப்பது, திமுக தலைமைக்கு மறைமுக நெருக்கடி தரும் யுக்தியா, அல்லது மேலிடத்தின் முடிவுக்கு கட்சியினர் தயார்படுத்தும் வியூகமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸார் விருப்பப்படியே கூட்டணி முடிவு எடுக்கப்படும் என்று மேலிடம் கூறியுள்ள நிலையில், “ஆட்சியதிகாரத்தில் பங்கு அவசியம்” எனும் குரலை மின்னஞ்சல் வலியுறுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.

