தமிழ்நாடு
சாலையில் திரியும் யானை : இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள்
சாலையில் திரியும் யானை : இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள்
ஈரோடு சாலையில் திரியும் ஒற்றையானை காட்டுக்குள் செல்ல மறுப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ஆசனூரின் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் தமிழகம் கர்நாடக இடையே மைசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் ஒற்றை ஆண் யானை சாலையோரம் நின்று மரக்கிளைகளை முறித்து சாப்பிடுவதும், அங்கும் இங்குமாக திரிவதுமாக இருந்தது.
யானையின் நடமாட்டம் காரணமாக இருபுறமும் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ஒற்றையானையை காட்டுக்குள் அனுப்பினர். யானைகள் சாலையோரம் நடமாடுவதால் அவற்றுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

