ஏரியில் யானைகள் ஆனந்தக்குளியல்: ஆபத்தை உணராமல் குவிந்த பொதுமக்கள்

ஏரியில் யானைகள் ஆனந்தக்குளியல்: ஆபத்தை உணராமல் குவிந்த பொதுமக்கள்

ஏரியில் யானைகள் ஆனந்தக்குளியல்: ஆபத்தை உணராமல் குவிந்த பொதுமக்கள்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் கிராம ஏரியில் காட்டு யானைகள் ஆனந்த குளியல் போட்டதை திரளான மக்கள் கண்டுகளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் யானைகள், காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களுக்குள் அடிக்கடி வருகின்றன.

இந்த நிலையில் பெட்டமுகிலாளம் கிராமத்தை ஒட்டியுள்ள சாமி ஏரிக்கு காட்டு யானை கூட்டம் வந்தன. பின்னர் அவை ஏரிக்குள் இறங்கி சிறிது நேரம் ஆனந்த குளியல் போட்டன. அப்போது யானைகள் ஒன்றன் மேல் ஒன்று தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடின. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏரியில் யானைகள் உற்சாகமாக குளிப்பதை கண்டு ரசித்தனர். மேலும் இளைஞர்கள், காட்டு யானைகள் ஆனந்த குளியல் போட்டதை தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து யானைகள் ஏரியை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

குளிப்பதற்காக ஏரிக்கு காட்டுயானைகள் அதிக அளவில் வந்து செல்வதால் ஏரி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காட்டுயானைகள் கூட்டத்தையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com