\
பவானி ஆற்றில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்: பரிசலில் மீன்பிடித்தவரை விரட்டியதால் பரபரப்பு

பவானி ஆற்றில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்: பரிசலில் மீன்பிடித்தவரை விரட்டியதால் பரபரப்பு

பவானி ஆற்றில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்: பரிசலில் மீன்பிடித்தவரை விரட்டியதால் பரபரப்பு
Published on

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரை தண்ணீருக்குள் யானைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 12 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் வெளியேறும் யானைகள் அருகிலுள்ள வாழை தோட்டங்களை சேதப்படுத்துவதோடு அங்குள்ள பவானி ஆற்றில் குளித்து மகிழ்வது என கடந்த 3 நாட்களாக யானைகளின் நடமாட்டம் லிங்காபுரம் பகுதியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை பவானி ஆற்றில் யானைகள் குளித்து விளையாடியக் கொண்டிருந்தன. அப்போது அங்கு பரிசலில் இருந்தவாறு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரை நோக்கி யானை வந்துள்ளது. அதை கவனித்த மீனவர் அங்கிருந்து வேகமாக பரிசலை இயக்க தப்பித்த காட்சிகளை அருகிலிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com