\
மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: நிலத்தின் உரிமையாளர் தலைமறைவு

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: நிலத்தின் உரிமையாளர் தலைமறைவு

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: நிலத்தின் உரிமையாளர் தலைமறைவு
Published on

வேலூர் மாவட்‌டம் பேர்ணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் வைத்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.

தமிழக-ஆந்திர எல்லை பகுதியான வேலூர் மாவட்‌டம் பேர்ணாம்பட்டு அருகில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காட்டில் இருந்து உணவு தேடி வந்த 6 வயது ஆண் யானை எதிர்பாராத விதமாக நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். மின்வேலி அமைத்த நில உரிமையாளர் தாமோதரன் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com