சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை உயர்வு

சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை உயர்வு
சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை உயர்வு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் யானைகள் எண்ணிக்கை 772 ஆக உயர்ந்துள்ளது.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. மழைபொழிவுக்கு முன், பின் என ஆண்டுக்கு இருமுறை இங்குள்ள யானைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன்படி,  மழைப்பொழிவுக்கு பின்  யானைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புப் பணி அண்மையில் நடந்தது. சத்தி புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, டி.என்.பாளையம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகத்தில் 46 குழுகளைச் சேர்ந்த 350 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள 18 வனக்கோட்டங்களில் மொத்தம் 2761 யானைகள் உள்ளன. அதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் திகபட்சமாக 772  யானைகளும் அதனை அடுத்த ஒசூரில் 499, முதுமலையில் 294 என்றும் குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1 யானையும் உள்ளன. யானைகள் வாழ்வதற்கான சூழல் ,குடிநீர் மற்றும் வனப்பாதுகாப்பு காரணமாக யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து ஜூன், ஜூலை மாதங்களில் பிற இடங்களுக்கு புலம்பெயர்ந்த யானைகள் தற்போது இனபெருக்கத்துக்காக மீண்டும் தலமலை வழியாக சத்தியமங்கலம் வரத் துவங்கியுள்ளன எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com