3 பேரை கொன்ற யானைக்கு 4 மயக்க ஊசி..!

3 பேரை கொன்ற யானைக்கு 4 மயக்க ஊசி..!

3 பேரை கொன்ற யானைக்கு 4 மயக்க ஊசி..!
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே 3 பேரை கொன்ற யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று, சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மூவரை தாக்கி கொன்றது. அதனையடுத்து, நேற்று ஒட்டனூர் அருகே மாந்தோப்பில் தஞ்சமடைந்திருந்த யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அரை மயக்கத்துடன் யானை சுற்றிசுற்றி வந்ததால், 4 மயக்க ஊசி செலுத்தி யானையை வனத்துறையினர் பிடித்தனர்.

பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் யானையை லாரியில் ஏற்றிய வனத்துறையினர், தளி அருகேயுள்ள ஜவளகிரி அடர் வனத்தில் யானையை விட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் யானை தாக்கி உயிரிழந்த தேவன் என்பவர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் வழங்கினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com