கோவை: ரயிலில் மோதி காயமடைந்த யானைக்கு தொடரும் சிகிச்சை!
கோவை நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள ஆண் காட்டு யானைக்கு சாடிவயல் யானை முகாமில் இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை நவக்கரை அருகே வாளையாறு அணையில் தண்ணீர் குடித்து விட்டு திரும்பிய ஆண் காட்டு யானை ஒன்று ரயில்வே தண்வாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்தது. இதையடுத்து அங்கு கால்நடை மருத்துவர்கள் குழுவோடு வந்த வனத்துறையினர் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து அங்கு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு மருந்துகள் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் , படுகாயத்துடன் உயிருக்கு போராடும் யானையை ஆலாந்துறை அடுத்த சாடிவயல் கும்மி யானை முகாமிற்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து சுமார் 2 மணியளவில் பொக்லைன் இயந்திரம் மூலம் யானையை தூக்கி, வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். பின்னர் அங்கிருந்து சாடிவயல் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து தர்பூசணி, வெள்ளம், தண்ணீரை உணவாக கொடுத்துள்ளனர். மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து யானை கவலைக்கிடமாக உள்ளதாக தொடர்ந்து வனத்துறை மற்றும் மருத்துவர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.