அதிக மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த மகிழ்ச்சியில் மனிதர்களுக்கு மட்டும்தான் இடமுண்டா என்ன? யானைகளுக்கும் இதில் பங்குண்டு என்கிறது தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலுள்ள ஏரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம்பாளையம் பகுதிலுள்ள ஏரிகள் மழையால் நிரம்பி வருகின்றன. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. ஆகவே மாதக் கணக்கில் தாகத்தை தணிக்கக்கூட வழியின்றி தவித்த யானைகள் இப்போது மகிழ்சியடைந்துள்ளன. சிவலிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில், 6 யானைகள் குட்டியுடன் சுமார் 2 மணி நேரம், தும்பிக்கையால் தண்ணீரை வாரி இறைத்து ஆனந்தக் குளியலிட்டன. இதை பொதுமக்கள் வெகுநேரம் கூட்டமாக கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.