\
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானைத் தாக்கி பாகன் உதவியாளர் பலி

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானைத் தாக்கி பாகன் உதவியாளர் பலி

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானைத் தாக்கி பாகன் உதவியாளர் பலி
Published on: 

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தாக்கியதில் பாகனின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.


மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குக் கடந்த 2015 ஆம் ஆண்டு அசாமிலிருந்து பெண் யானையான தெய்வானை வரவழைக்கப்பட்டது. அதன் பின்னர் தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசித்து வந்தது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் யானைப்பாகனின் உதவியாளர் காளிதாஸ் என்பவர் யானையைக் குளிப்பாட்டியுள்ளார்.

அப்போது திடீரென அந்த யானை காளிதாஸை தனது காலால் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த காளிதாஸ் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக புத்துணர்ச்சி முகாமுக்குச் சென்று வந்த 14 வயதுடைய தெய்வானை யானை ஊரடங்கின் காரணமாகக் கடந்த 60 நாட்களாக வெளியே செல்லாமல் இருந்தது. ஏற்கனவே மூன்று முறை யானை திடீரென மிரண்டு பகன்களைத் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் கோவில் யானை தாக்கி பாகனின் உதவியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com