தமிழ்நாடு
சென்னையில் வார நாட்களைப் போன்று இன்று மின்சார ரயில் இயக்கம்
சென்னையில் வார நாட்களைப் போன்று இன்று மின்சார ரயில் இயக்கம்
அரசுப் பேருந்துகள் முழு அளவில் இயக்கப்படாததால், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வார இறுதி நாட்களில் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கபடும். ஆனால், தற்போதையை நிலையைக் கருத்தில் கொண்டு, வார நாட்களைப் போன்றே இன்றும் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் ஏராளமானோர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கூடுதலாக 13 லட்சத்து 69 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. மின்சார ரயில் போன்று மெட்ரோ ரயிலிலும் பயணிகள் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.