\
சென்னையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

சென்னையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

சென்னையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
Published on

சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் தேங்கியுள்ள 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் வினியோகம் செய்ய பயன்படும் துணைமின் நிலையங்களில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்று வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களுக்கு தேவையானவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத்துறையிடம் கேட்டுள்ளதாகவும் சத்யகோபால் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com