சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்துவரும் மின் விநியோகம்!

சென்னையில் மிக்ஜாம் புயல் ஓய்ந்துள்ள நிலையில், நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது. இதையடுத்து மின்சாரம் சீர்செய்யப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் ஓய்ந்துள்ள நிலையில், நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது. இதையடுத்து மின்சாரம் சீர்செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், எங்கெல்லாம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் அவர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசுகோப்புப் படம்

அதன்படி,

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம்  வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ்,  இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள்,

அமைச்சர் தங்கம் தென்னரசு
மிக்ஜாம் | புயலுக்குப் பின் அமைதி... சென்னையின் தற்போதை நிலை என்ன?

சென்னை  வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF,  இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை  தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி,

கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம்,    போரூர் ஒரு பகுதி  மற்றும்     சென்னை  தெற்கு - II  மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர்,  அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி”

இன்னும் ஓரிரு மணி நேரத்தில் படிப்படியாக அனைத்து இடங்களிலும் மின்சாரம் விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com