மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல்புதிய தலைமுறை

மிக்ஜாம் புயல்.. மின்சாரத்துறை விடுத்த உத்தரவு என்ன?

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மின்சாரத்துறை விடுத்த உத்தரவு என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் அறிவோம்.
Published on

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், வடதமிழகத்தை நோக்கி நகரும் எனக் கூறப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மின்சாரத்துறை, மின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புயல் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதலாக மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை களப்பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. மின்தடை மற்றும் மின்சார பாதிப்பு குறித்து ஏதேனும் புகார் வந்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்களை கண்காணித்து தீவிர ஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மின்சாரத்துறை விடுத்த உத்தரவு என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் அறிவோம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com