மழைக்காலங்களில் மின்விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி? - மின்சாரத்துறை கொடுத்த அறிவுறுத்தல்
மழைக்காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைத் தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருக்கிறது.
மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள் மின்சார கம்பங்கள் டிராஸ்பார்ம் பகுதிகள் இருக்கும் இடங்களுக்குச் செல்லக்கூடாது.
மின்கம்பங்கள் மிச்சார கேபிள்கள் பகுதிகளில் இருக்கும் தண்ணீரில் நடக்கக்கூடாது.
தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும் கேபிள்களை தொடுவதையும் அதன் அருகில் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ஈரமான கைகளால்மிசார சுவிட்ச்கள் போடுவதை தவிர்க்கவேண்டும்.
மின் வயர்கள் திறந்த நிலையில் இல்லாமல் டேப் சுற்றி வெளிப்புற மின்காப்பு செய்யவேண்டும்.
வீடுகளில் உள்ள ஈரப்பதமான இடங்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மின் கசிவு ஏற்பட்டால் உடனே மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
மின்வாரியத்தின் 24 மணி நேர சேவையான 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம்.