சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
Published on

சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டதால் அப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை செல்லும் மின்சார ரயிலின் இரு பெட்டிகள், ஆவடி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இதன் காரணமாக சென்னை மற்றும் அரக்கோணம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்டதூரம் நடந்தே சென்று சாலை வழியாக சொந்த ஊர் சென்றனர். 

ரயில்வே ஊழியர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பின் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி பாதையை சீர் செய்தனர். சீரமைப்பு பணிகள் தாமதமானதால் அப்பாதையில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பிட்ட இடைவெளியில் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com