\
ஆவடி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

ஆவடி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

ஆவடி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து
Published on

சென்னை அடுத்த ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தண்டம் புரண்டு விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், பயணிகள் காயமின்றி தப்பினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை செல்லும் பயணிகள் ரயிலின் இரு பெட்டிகள், நேற்றிரவு ஆவடி ரயில் நிலையம் அருகே தடம்புரண்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், பயணிகள் காயமுமின்றி தப்பினர். விபத்து காரணமாக சென்னை மற்றும் அரக்கோணம் மார்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நெடுநேரம் நடந்தே சென்று சாலை மார்க்கமாக சொந்த ஊர் சென்றனர்.

தகவலறிந்து அங்குவிரைந்த ரயில்வே ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் விபத்திற்குள்ளான ரயிலை சரிசெய்து ரயில் போக்குவரத்தை சீர்செய்தனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com