hospitalpt desk
தமிழ்நாடு
துக்க வீட்டில் சடலம் வைக்கப்பட்டிருந்த Freezer Box-ல் மின்கசிவு... 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சேத்துப்பட்டு அருகே துக்க நிகழ்வுக்குச் சென்ற 15 பெண்கள் மீது மின்சாரம் தாக்கிய நிலையில், நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தத்துனுர் கிராமத்தில் காவியா என்ற 15 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்களில் சிலர், அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த ப்ரீசர் பாக்ஸை (Freezer Box-ஐ) தொட்டவாறு கதறி அழுதுள்ளனர். அப்போது மின் கசிவு ஏற்பட்டு 15 பெண்கள் தூக்கி வீசப்பட்டனர்.
electric shockpt desk
இந்நிலையில். உடனடியாக மின் இணைப்ப துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் ஏதுமின்றி நல்வாய்ப்பாக அங்கிருந்த அனைவரும் உயிர் தப்பினர். இதையடுத்து மின்சாரம் தாக்கிய உறவினர்கள் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.