தமிழ்நாடு
அத்திவரதர் விஐபி தரிசன வழியில் மின்கசிவு - பக்தர்கள் பதட்டம்
அத்திவரதர் விஐபி தரிசன வழியில் மின்கசிவு - பக்தர்கள் பதட்டம்
அத்திவரதர் விஐபி தரிசன வழியில் உள்ள கூடாரத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் பக்தர்கள் பயம் கொண்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொது தரிசனம், விஐபி தரிசனம் என இரண்டு தரிசனங்கள் மூலம் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும்.
இந்நிலையில் விஐபி தரிசன வழியில் உள்ள கூடாரத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் சிலர் காயம் அடைந்தனர். உடனே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.