திருப்பத்தூர்: சார்ஜ் போட்டபோது திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்

திருப்பத்தூர் அருகே வீட்டில் சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கு வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது வாகனத்தில் இருந்து லேசாக புகை வந்ததைக் கண்ட சசிகுமார், உடனே மெயின் சுவிட்சை அணைத்துள்ளார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அந்த வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com