
எதற்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் சத்ரியா பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்காளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்கு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடப்பதாக வாக்கு சாவடி அலுவலர்களிடம் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.