பசுவிற்கு பிரசவம் பார்த்த தேர்தல் அதிகாரி - குவியும் பாராட்டு

பசுவிற்கு பிரசவம் பார்த்த தேர்தல் அதிகாரி - குவியும் பாராட்டு
பசுவிற்கு பிரசவம் பார்த்த தேர்தல் அதிகாரி - குவியும் பாராட்டு

பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த பசுவிற்கு பிரசவம் பார்த்த தேர்தல் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பாளர் ஜோசப் தலைமையிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மல்லியம்பத்து என்கிற இடத்தில் சாலையில் பசு ஒன்று பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தது. அதனைப்பார்த்த  ஜோசப் உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த மாட்டிற்கு பிரசவம் பார்த்து கன்று குட்டியை வெளியே எடுத்தார்.

அதிகாரியின் இந்த உதவியை கண்டு அங்கிருந்தவர்கள் அவருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com