‘சுட்டெரிக்கும் வெயில்.. வாக்காளர்களை காக்க முன்னேற்பாடுகள் செய்துள்ளோம்’ - சத்யபிரதா சாகு விளக்கம்!

தமிழக தேர்தலில் வாக்காளருக்கு செய்யப்பட வசதிகள் என்னென்ன என்பது குறித்து தேர்தல் அதிகாரி கொடுத்த விளக்கம்
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவுPT

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், வாக்குப்பதிவானது மிக மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளார்களை சந்தித்து பேசுகையில்,

“பிற்பகல் 1 மணி வரை வந்த விவரத்தின்படி வாக்குப்பதிவானது தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்டமாக தருமபுரியில் 44.08% வாக்குகள் பதிவாகி உள்ளன. மத்திய சென்னையில் 32.31 % வாக்குகள் பதிவாகி உள்ளன. விளவங்கோடு தொகுதியில் 35.14% பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு
தமிழக வெற்றிக் கழக தலைவராக முதல் ஓட்டு; கையில் காயமா? சோர்வாக காணப்பட்ட விஜய்! முழு விவரம்

இன்னும் வாக்களிக்க நேரம் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். மேலும் வாக்காளர்களின் வசதிக்காக நாற்காலி மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிழலுக்கு பந்தல், மருத்துவ வசதியும் செய்து கொடுத்து இருக்கின்றோம். வெயிலை சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com