\
தேர்தல் ஆணையக்குழு டிச. 21ஆம் தேதி தமிழகம் வருகை

தேர்தல் ஆணையக்குழு டிச. 21ஆம் தேதி தமிழகம் வருகை

தேர்தல் ஆணையக்குழு டிச. 21ஆம் தேதி தமிழகம் வருகை
Published on: 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையக்குழு வரும் 21 ஆம் தேதி சென்னை வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21, 22 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் சென்னையில் ஆலோசிக்க உள்ளனர். டிசம்பர் 21 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் ஆலோசனை மேற்கொள்கின்றனர். டிசம்பர் 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் உயர்மட்ட குழுவினர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேச உள்ளனர்.

ஆலோசனைக்கு பின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் உயர்மட்ட குழு மனுக்களை பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com