\
சசிகலா அணிக்கு தொப்பி சின்னம்; ஓபிஎஸ்-க்கு இரட்டை விளக்கு மின்கம்பம்

சசிகலா அணிக்கு தொப்பி சின்னம்; ஓபிஎஸ்-க்கு இரட்டை விளக்கு மின்கம்பம்

சசிகலா அணிக்கு தொப்பி சின்னம்; ஓபிஎஸ்-க்கு இரட்டை விளக்கு மின்கம்பம்
Published on

சசிகலா தரப்பிற்கு தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் புதிய சின்னங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி சசிகலா தரப்புக்குத் தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக சசிகலா தரப்புக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. இது வேண்டாம் என சசிகலா அணி தெரிவித்தால் தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியின் கட்சிப் பெயர் “அதிமுக புரட்சித் தலைவி அம்மா” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சசிகலா அணியின் கட்சி பெயர் “அதிமுக அம்மா” என வைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com