\
ஜெ. வீடியோவை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்: தேர்தல் ஆணையம்

ஜெ. வீடியோவை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்: தேர்தல் ஆணையம்

ஜெ. வீடியோவை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்: தேர்தல் ஆணையம்
Published on

ஜெயலலிதா வீடியோ ஆர்.கே.நகர் தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் என்பதால் அதனை ஒளிபரப்புவரை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இதனை வெளியிட்டுள்ளார். இதனிடையே தேர்தல் விதிகளை மீறி ஜெயலலிதா குறித்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ ஆர்.கே. நகர் தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் என்பதால் அதனை ஒளிபரப்புவரை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com