வரைவு வாக்காளர் பட்டியல் web
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 94.32% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்.. இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழ்நாட்டில் 94.32% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
தமிழ்நாட்டில் 94.32 விழுக்காடு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, 6 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 835 படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக, தேர்தல்ஆணையம் கூறியுள்ளது.
வாக்காளர் பட்டியல்web
இதுவரை, எஸ்.ஐ.ஆர் நடைபெற்றுவரும் 12 மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களிலிருந்துபெறப்பட்ட, 90.14 விழுக்காடு படிவங்கள் பதிவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 45 கோடியே 94 லட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

