ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது
Published on

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக 6 பேர் பிடிபட்டனர்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனயாடி பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன், கையில் சுமார் ரூ.30,000 மற்றும் ரூ.40,000 என வைத்துக்கொண்டு புறப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.80,000 ஆயிரத்தை பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட அந்த ஆறு நபர்களையும், ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உட்பட சில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com