மே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம்

மே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம்

மே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம்
Published on

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் Model code of conduct எனப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 27 ஆம் தேதி வரை இருக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்திக்குறிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளின் தேர்தல், 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதிகளை கடந்த மார்ச் 10 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை, மே 27 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக சத்ய பிரதா சாஹூவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com