தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா?- இந்திய தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா என்பது குறித்து சென்னை நட்சத்திர ஓட்டலில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தனர்.
முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றனர். அதில், தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, வருமானவரித்துறை பொறுப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இதனை தொடர்ந்து தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன், அமலாக்கத்துறையினர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசிக்கின்றனர். தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரிக்கு சென்று அங்கும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.