வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்web

வாக்காளர் பட்டியல் திருத்தம்.. தேர்தல் ஆணையம் எடுத்த திடீர் முடிவு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வரும் 10ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
Published on

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல்ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்x page

இத்தகைய சூழலில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்களது மாநிலங்களில் உள்ள மொத்தவாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசியாக எப்போது வாக்காளர்பட்டியல் திருத்தம் நடைபெற்றது ஆகிய தகவல்களை வருகிற 10-ஆம் தேதிசமர்ப்பிக்க வேண்டும் என தலைமைதேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியல்
பிஹார்: வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்

அன்றைய தினம் நடைபெறவுள்ளஆலோசனைக் கூட்டத்தில்இதுதொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. முன்னதாக பிஹாரில் சட்டப்பேரவைத்தேர்தல் நெருங்கும் சூழலில் வாக்காளர்பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளைதேர்தல் ஆணையம் மேற்கொண்டது.அதில், 65 லட்சத்துக்கும் மேற்பட்டவாக்காளர்களின் பெயர்கள்நீக்கப்பட்டது சர்ச்சையைஏற்படுத்தியிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com