\
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt web

“காத்திருந்தோம்.. கிடைத்துவிட்டது” விஜய் நெகிழ்ச்சி

தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதுதொடர்பான அறிக்கையை விஜய் பகிர்ந்துள்ளார்.
Published on

காத்திருந்தோம்.. கிடைத்துவிட்டது..

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் அப்போதே தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ட்விட்டர்

அந்த அறிக்கையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படைக் கோட்பாடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தவெக தலைவர் விஜய்
சயனைடு கலந்த பானம்.. கொலைசெய்து பொருள் திருட்டு.. 3 சீரியல் கில்லர் பெண்கள் கைது!

அங்கீகாரம் பெற்ற தவெக

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.

அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தோதல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தவெக தலைவர் விஜய்
பிற்போக்குத்தன கருத்துக்களை பேசிய மகாவிஷ்ணு... செப்.20 வரை நீதிமன்ற காவல்

தடைகளை தகர்த்து வலம்வருவோம்

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி. கொள்கை தீபம் ஏந்தி. தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்
மகாவிஷ்ணு: வாய் வார்த்தைகளே முதலீடு.. பொருளீட்டுவதே இலக்கு.. வரவு செலவுகள் எல்லாமே வெளிநாடுகளில்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com