\
சட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை 

சட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை 

சட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை 
Published on: 

சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய தொகுதியில் பரப்புரை நேரம் முடிந்துள்ளது. 

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த மூன்று தொகுதிகளில் பரப்புரை முடிந்துள்ளது. இதனையடுத்து இந்தத் தொகுதிகளிலிருந்து வெளி நபர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது கட்சி வேலைகள் செய்ய பிற மாவட்டங்களிலிருந்து வந்த கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com