பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மூதாட்டி ; சிசிடிவியில் சிக்கிய இளைஞர்!

எண்ணூரில் மூதாட்டியை அடித்துத் துன்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டியை தூக்கிச் செல்லும் இளைஞர்.. சிசிடிவி காட்சி
மூதாட்டியை தூக்கிச் செல்லும் இளைஞர்.. சிசிடிவி காட்சிpt web

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி பொன்னி (83). இவர் அதே பகுதியில், மக்கள் கொடுத்து வந்த உணவுகளை உண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி மூதாட்டி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்துத் தகவலறிந்த, எண்ணூர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 18 வயது மதிக்கத்தக்கச் இளைஞர், மூதாட்டியைத் துன்புறுத்தி இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

மூதாட்டியை தூக்கிச் செல்லும் இளைஞர்.. சிசிடிவி காட்சி
சேலம் : அரசு அலுவலகத்தில் மது அருந்தும் V.A.O உதவியாளர்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

மேலும், நேற்று மூதாட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மூதாட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து எண்ணூர் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சிறுவனை போலீசார் தேடி வந்தனர். நேற்று மாலை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த சிறுவனைப் பிடித்து விசாரித்ததில், மூதாட்டியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை ஒப்புக் கொண்டுள்ளான்.

பின்னர் சிறுவனைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூதாட்டியை தூக்கிச் செல்லும் இளைஞர்.. சிசிடிவி காட்சி
“ஸ்டாலினும், உதயநிதியும் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா?” – சீமான் கேள்வி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com