ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர்: சாதுர்யமாக மீட்ட ரயில்வே காவலர்கள்

ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர்: சாதுர்யமாக மீட்ட ரயில்வே காவலர்கள்

ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர்: சாதுர்யமாக மீட்ட ரயில்வே காவலர்கள்
Published on

அரக்கோணத்தில் ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை சாதுர்யமாக ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் காப்பாற்றினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் நடைமேடை 7லில் இருந்த மின்சார ரயில் நின்றிருந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோ (69) என்ற முதியவர் ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ரயில் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் உடனடியாக நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு ரயில்வே ஊழியர்களை வரவழைத்து சாதுர்யமாக செயல்பட்டு காவல்துறை மற்றும் ரயில்வே ஊழியர்கள் முதியோரை பத்திரமாக மீட்டுள்ளசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துணிச்சலாக செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றிய மகலிங்கம்  ஜிதேந்திர மீனா மற்றும் பத்மநாபம் ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இதையடுத்து முதியவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com