birthday celebrationpt desk
தமிழ்நாடு
தூத்துக்குடி: பனை மரங்களுக்கு நடுவே உறவினர்கள் புடைசூழ 105-வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்
வல்லநாடு அருகே பனைமரங்களுக்கு நடுவே ராமலிங்கம் என்ற 105 வயது முதியவர், தனது மகன்கள், மகள்கள் முதல் ஓட்டன், ஓட்டிகள் வரை அனைவரையும் ஒரே மேடையில் வைத்து உறவினர்களுக்கு விருந்து வழங்கி 105-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம் பிச்சம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 5 மகள்கள் 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று ராமலிங்கம் தனது 105-வது பிறந்தநாளை பேரன் பேத்திகள் ஓட்டன் ஓட்டிகளுடன் பனைமரங்கள் நிறைந்த தோட்டத்தின் நடுவே மிக பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
Ramalingampt desk
இந்த நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் அதிகம் கொண்ட அகரம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மகன்கள், ராமலிங்கத்திற்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கேக்கை ராமலிங்கம் வெட்டினார். இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், ஊர் பொதுமக்கள், நண்பர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரிடம் ஆசி பெற்றனர்.