
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நடுவே, வோடஃபோன் விளம்பரங்களை பார்த்தவர்கள், ’இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று நினைத்திருக்கக் கூடும். அப்படி நினைத்திருந்தால் அது சரிதான். இவர்கள் புகழ்பெற்ற பரதக்கலைஞர்களான தஞ்செயன்-சாந்தா தம்பதியினர்.
எப்படி கிடைச்சது இந்த வாய்ப்பு என்றால், ‘எங்க மகன் சத்யஜித், போட்டோகிராபர். வோடஃபோன் விளம்பரத்துல நடிக்க உங்க ரெண்டு பேரையும் கூப்பிடறாங்க. சம்மதா?’ன்னு கேட்டார். நான் ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கிய நெரோலாக் பெயின்ட் விளம்பரத்துல நடிசிருக்கிறதால, ஓகே சொன்னேன். சாந்தாவுக்கும் சம்மதம். டைரக்டர் பிரகாஷ் சர்மா இதை இயக்கினார். மொத்தம் ஆறு எபிசோடா எடுத்தாங்க. நாங்க பல நாடுகளுக்கு போயிருக்கோம். ஆனா, கோவா போனதே இல்லை. இந்த ஷூட்டிங்கை அங்க வச்சதால எங்களுக்கு சந்தோஷம். வயதான தம்பதி கோவாவுக்கு ரெண்டாவது ஹனிமூனுக்கு வந்து செல்வது போல் கான்செப்ட். அதனால அவங்க சில விஷயங்களை மட்டும் சொல்லிக்கொடுத்தாங்க. மத்ததை நாங்களே பேசிகிட்டோம். விளம்பரம் வெளியான பிறகு நல்ல வரவேற்பு. மகிழ்ச்சியா இருக்கு’ என்கிறார் தனஞ்செயன். ஆமோதிக்கிறார் சாந்தா.