டெங்கு காய்ச்சலால் 8 வயது சிறுமி பலி

டெங்கு காய்ச்சலால் 8 வயது சிறுமி பலி

டெங்கு காய்ச்சலால் 8 வயது சிறுமி பலி
Published on

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 8 வயது சிறுமி உயிரிழந்தார். 

தமிழகத்தில் டெங்கு மற்றும் பிற காய்ச்சலால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதனையடுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசு சாரா அமைப்புகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தன. இதனால் டெங்கு காய்ச்சலின் தாக்கம் படிபடியாக குறைந்தது. இருப்பினும் டெங்கு மற்றும் காய்ச்சல் மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் வருகின்றன.

இந்நிலையில்,  திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் பகுதியில் ராணுவ வீரர் ஜெயசீலன் என்பவரின் மகள் சுஷ்மிதா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். தங்கள் பகுதியில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல்நல பாதிப்பு ‌ஏற்படுவதாகவும், அதனால் உரிய நடவடிக்கை எடுத்து, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com