லாரி மீது கார் மோதி 8 பேர் பலி: திருச்சி அருகே பயங்கரம்!

லாரி மீது கார் மோதி 8 பேர் பலி: திருச்சி அருகே பயங்கரம்!
லாரி மீது கார் மோதி 8 பேர் பலி: திருச்சி அருகே பயங்கரம்!

திருச்சி அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக பலியாயினர். 

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பயணம் செய்து கொண் டிருந்தனர். திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயி னர். 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை  சேகரித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com