பதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு
அடையாளம் தெரியாத கோழிப்பண்ணைகளிலிருந்து பதப்படுத்தப்படாத முட்டைகளை அனுமதித்தால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சமூகநலத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன் முட்டை டெண்டர் நடவடிக்கைகளை செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நிறுத்திவைத்து வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் தமிழக சமூக நலத்துறை சார்பில் தாக்கல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநில அளவிலான டெண்டர் முறை என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் டெண்டர் வெளிப்படைச் சட்டத்தின் கீழ்தான் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் பறவைக்காய்ச்சல் தொற்றுநோய் பரவாத முட்டைகளாக இருக்கவேண்டும் என்றும் இதனால் தொற்றுநோய் பரவாத தொடர் கண்காணிப்பில் இருக்கக்கூடிய கோழி பண்ணைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட முட்டைகளை வாங்கவே தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read Also -> 8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம்