தீபாவளி பண்டிகையை ஒட்டி முட்டை மற்றும் கறிக்கோழியின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தி 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு முட்டை விற்பனை அதிகரித்து தேவை ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விலை அதிகரித்து வருவதாகவும், அதேபோல் தமிழகம், கேரளாவில் முட்டையை அதிகளவு பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவதால் முட்டை தேவை அதிகரித்துள்ளதாகவும், இதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கறிக்கோழி விலையும் 3 நாட்களில் கிலோ ஒன்றுக்கு 7 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 14-ம் தேதி கறிக்கோழி கிலோ ஒன்று 69 ரூபாயாக இருந்த விலை 15ம் தேதி ஒரே நாளில் 5 ரூபாயும் 16-ம் தேதி இரண்டு ரூபாயும் உயர்ந்தது. தீபாவளிக்கு விற்பனை அதிரிக்கும் நிலையில் அதிகளவு ஆர்டர் கிடைப்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.