\
முட்டை விலை 10 காசுகள் உயர்வு: 4 ரூபாய் 30 காசாக  நிர்ணயம்

முட்டை விலை 10 காசுகள் உயர்வு: 4 ரூபாய் 30 காசாக நிர்ணயம்

முட்டை விலை 10 காசுகள் உயர்வு: 4 ரூபாய் 30 காசாக நிர்ணயம்
Published on
முட்டை விலை ஏழு நாட்களுக்கு பிறகு 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 4 ரூபாய் 30 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் தேதியிலிருந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசாக இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை பத்து காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோழித் தீவன மூலப்பொருள்களின் விலையேற்றம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் விலை உயர்த்தப்படுவதாக கோழி பண்ணையாளர்கள் கூறினர். வரும் நாட்களில் மேலும் விலை உயரக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com