"NEET-ஐ தகுதித்தேர்வு என்பதே தவறு.. அது வணிகத்தின் சூதாட்டம்" - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

நீட் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் கல்வியாளர் கஜேந்திர பாபு, ”நீட் ஒரு வணிக சந்தைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என விமர்சித்துள்ளார்.

முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்தநிலையில், 3வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பேண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, சந்தையிடம் நீங்கள் கல்வியை ஒப்படைத்த பிறகு சந்தை இயங்கக்கூடிய தன்மைக்கு ஏற்றார் போன்று எல்லாமே நடக்கும் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த விரிவான பேட்டியை இங்கு பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com