எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து திங்கட்கிழமை அறிவிக்கப்படும்: முதல்வர்

எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து திங்கட்கிழமை அறிவிக்கப்படும்: முதல்வர்
எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து திங்கட்கிழமை அறிவிக்கப்படும்: முதல்வர்

அரசியல்வாதிகளிடம் ஆலோசனை கேட்க அவர்கள் என்ன மருத்துவர்களா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. ரூ. 1000 நிவாரணத்தொகை, குடும்ப அட்டைதாரர்களில் 98 % பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது. விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது. எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து அரசு திங்கட்கிழமை அறிவிக்கும். சர்க்கரை ஆலை இயங்க தடை இல்லை. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துசெல்ல தடையில்லை. 1.25 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 24 ஆயிரம் கருவிகள் வந்துள்ளன.

மத்திய அரசிடம் 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கேட்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். உயிரைக் காக்க வேண்டிய நேரம் இது. குற்றம் சொல்லவேண்டிய நேரம் இது அல்ல. அனைத்து கட்சி கூட்டத்தில் என்ன ஆலோசனை சொல்ல முடியும். இதில் மருத்துவர்கள் தான் ஆலோசனை சொல்லவேண்டும். இது மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. அவர்கள் சொல்லும் வழிமுறைகளைதான் பின்பற்ற வேண்டும். அதைத்தான் அரசு செய்கிறது. ஆலோசனை சொல்ல அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? மருத்துவ வல்லுநர்கள் சொல்லும் ஆலோசனைகளை அரசு ஏற்கும். எதிர்க்கட்சிகளிடம் வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நில்லுங்கள். மக்கள் தான் எங்களுக்கு முக்கியம். அவர்களின் உயிர் முக்கியம். இனி எதிர்க்கட்சிகள் பேசும் பேச்சுக்களை பொருட்படுத்தபோவதே இல்லை.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com