அம்மா இருசக்கர வாகன திட்டம்: முதலமைச்சரின் முதல் அறிவிப்பு

அம்மா இருசக்கர வாகன திட்டம்: முதலமைச்சரின் முதல் அறிவிப்பு

அம்மா இருசக்கர வாகன திட்டம்: முதலமைச்சரின் முதல் அறிவிப்பு
Published on

உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக அம்மா இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கான கோப்புகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு லட்சம் உழைக்கும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச தொகையாக ரூ.20,000 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12,000-த்திலிருந்து ரூ.18,000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 6 லட்சம் தாய்மார்கள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மீனவர்களுக்கு தனி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 5,000 வீடுகள் கட்டப்படும் என அவர் அறிவித்தார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.100லிருந்து ரூ.200ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கான உதவித்தொகை ரூ.150-லிருந்து ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com