விஜய் - எடப்பாடி பழனிசாமிweb
தமிழ்நாடு
ஆதவ் சர்ச்சை பேச்சு | தொலைபேசியில் பேசினாரா விஜய்? - எடப்பாடி பழனிசாமி பளீச் பதில்
கோவையில் நடிகர் விஜய் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அதெல்லாம் இல்லைங்க என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக விஜய் தங்களிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதெல்லாம் இல்லைங்க. மறுபடியும் அவரே ட்விட் போட்டார்ல அதோட முடுஞ்சது என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.